சரவணம்பட்டி
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கீரணத்தம் ஊராட்சி புதுப்பாளை யம் விநாயகர் கோவிலை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது42). தனியார் நிறுவன ஊழியர். இவர், அந்த பகுதியில் உள்ள தெருநாயை தாக்கி உள்ளார்.
இது குறித்து வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பினருக்கு புகார் வந்தது. அதன்பேரில் டாக்டர் மினி வாசுதேவன் சம்பவ இடத்துக்கு வந்து மாரிமுத்துவிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, டாக்டர் மினி வாசுதேவனை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் மாரிமுத்து மீது தெருநாயை தாக்கியது, பெண் டாக்டருக்கு மிரட்டல் விடுத்தது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.