கோவை
கோவை ஆர்.எஸ்.புரம் லிங்கப்பா செட்டி வீதியை சேர்ந்தவர் ஹரிஷ் குமார் (வயது 52).
இவர் அவினாசி ரோடு கடலைக்கார சந்து பகுதி யில் மின் விளக்கு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர், வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். அவர், நேற்று காலை வந்து கடையை திறந்து உள்ளே சென்றார்.
அங்கு சுவரில் காற்றை வெளியேற்றுவதற்காக இருந்த எக்சாஸ்டர் மின்விசிறி உடைந்து கீழே கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பணப்பெட்டியை பார்த்த போது, அதில் இருந்த ரூ.2 ஆயிரம் வெள்ளிக்காசுகள், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.