மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்;

Update:2021-10-08 21:04 IST
கோவை

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோவை டாடாபாத் பவர்ஹவுஸ் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். பி.ஆர்.நடராஜன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்த சட்டங்களை திரும்பபெற வேண்டும். உத்தரபிரதேசத்தில் பலியான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், 

இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்