கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலி;

Update:2021-10-10 21:15 IST
கிணத்துக்கடவு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வேம்பூர் கரட்டு சாலை யூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் அரசு பஸ் டிரைவர். இவருடைய மகன் தீபக் (வயது25). ஐ.டி.ஐ. படித்துள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் தீபக் கிணத்துக்கடவு அடுத்து கல்லாங்காடுபுதூர் பகுதியில் நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லாங்காடுபுதூர் பகுதியிலுள்ள ரோட்டில் இடைவெளியில் தீபக் மோட்டார்சைக்கிளில் ரோட்டை கடக்க முயன்ற போது பின்னால் கோவையிலிருந்து அதிவேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட தீபக் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் ரோட்டோரம் இருந்த இரும்பு தடுப்பு கம்பி மீது மோதி நின்றது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீசார் தீபக்கை உடலை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீபக் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் தீபக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்