ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது

ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது;

Update:2021-10-11 19:45 IST
குன்னூர்

குன்னூர் நகருக்கு குடிநீர் வழங்கும் ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது.

ரேலியா அணை

குன்னூர் நகராட்சியின் 30 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரமாக ரேலியா அணை உள்ளது. 

குன்னூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பந்துமி அருகில் அடர்ந்த வனப்பகுதியில் அணை உள்ளது. 

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையின் நீர்மட்டம் 43.6 அடி ஆகும். 14 ஏக்கர் பரப்பளவில் உள்ள ரேலியா அணைக்கு மைனலா மற்றும் தொட்டபெட்டா நீரூற்றுக்கள் நீர் ஆதாரமாக உள்ளது. 

தற்போது 
குன்னூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணை தனது முழு கொள்ளளவான 43.6 அடியை எட்டியுள்ளது. 

இதன் காரணமாக உபரி நீர் அணையின் பின்புறம் உள்ள கால்வாய் மூலம் வெளியேறி வீணாக சென்று ஆற்றில் கலக்கிறது.

தடுப்பணை வேண்டும்

கோடை காலத்தில் குன்னூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே அங்கு குடிநீர் பிரச்சினையை போக்க நீண்ட கால திட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. 

எனவே மழை காலத்தில் அணை நிரம்பி வழிந்து வெளியேறும் உபரி நீரை அணைக்கு அருகில் தடுப்பணை கட்டி சேமிக்க வேண்டும். 

ஆனால் அந்த திட்டம் கிடப்பில் உள்ளது தடுப்ணை கட்டுவதன் மூலம்  குன்னூரில் குடிநீர் தட்டுபாட்டை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

மேலும் செய்திகள்