வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகை திருட்டு;

Update:2021-10-11 21:29 IST
துடியலூர், அக்.12-


கோவை துடியலூர் அருகில் உள்ள பன்னிமடை தீபம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் லதா (வயது 55). இவர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று காலை லதாவின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி லதாவுக்கும், தடாகம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், லதாவும் தனது வீட்டுக்கு வந்தார். 

அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 13 பவுன் நகை திருட்டுப் போனது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், பூட்டை உடைத்து நகை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்