சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.752-க்கு விற்பனை

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.752-க்கு விற்பனை ஆனது.

Update: 2021-10-11 22:29 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 35 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 4 டன் பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.752-க்கும், முல்லை ரூ.540-க்கும், காக்கடா ரூ.600-க்கும், செண்டுமல்லி ரூ.100-க்கும், பட்டுப்பூ ரூ.78-க்கும், ஜாதிமல்லி ரூ.450-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.340-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.

மேலும் செய்திகள்