நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-10-12 20:11 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றிபெற்ற  ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வெற்றிபெற்ற வேட்பாளர்கள்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை  நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இது வரை 6 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் அம்சவேணி, 2- வது வார்டில் தே.மு.தி.க .வேட்பளர் செல்வி, 3-வது வார்டில் தி.மு.க.வேட்பாளர் ஜெயா, 4- வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜன், 5- வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் தனலட்சுமி, 6- வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் தேவராஜ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர், வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார்.

இதேபோல நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் இது வரை 10 பேர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர்கள்

நாராயணபுரம்-  கிளியம்மாள், அலசாந்தபுரம்- சரளா, திம்மாம்பேட்டை- கிருஷ்ணன், தும்பேரி- சங்கீதா, அளிஞ்சுகுளம்- முனியப்பன், கொடையாஞ்சி- பாரி, வடக்குப்பட்டு- மோகனவேல், புல்லூர்- கோகிலா, மல்லகுண்டா- தமிழ் செல்வி, அம்பலூர்- முருகேசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விநாயகம் வெற்றிபெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார்.

மாவட்ட கவுன்சிலர்

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி 6-வது வார்டு  கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிந்துஜா 26,730 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற சிந்துஜாவுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விநாயகம் அதற்கான சான்றிதழ் வழங்கினார்.

மேலும் செய்திகள்