‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89390 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி

Update: 2021-10-12 21:17 GMT
தேங்கி நிற்கும் கழிவுநீர் 
மதுரை ஊமச்சிக்குளத்தில் வசந்தம் கார்டன் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. கொசுக்கடியால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 
காமராஜ், மதுரை. 
சாலை வேண்டும் 
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் சோமநாதமங்கலம் வார்டு எண் 8-க்கு உட்பட்ட அருள்நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி விடுவதால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சோமநாதமங்கலம். 
 சுகாதார சீர்கேடு 
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா பேய்க்குளம் கிராமம் 1-வது வார்டு கிழக்கு தெருவில் பாலத்தின் அடியில் சாக்கடை கழிவுநீர் நேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
முருகன், பேய்க்குளம்.
குண்டும், குழியுமான சாலை 
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட சடை முனியன் வலசை கிராமத்தில் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், சடைமுனியன் வலசை. 
மீண்டும் பஸ் இயக்கப்படுமா?
ெதன்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து ராஜபாளையம், மதுரை, சிங்கம்புணரி வழியாக பொன்னமராவதிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பாலசுப்பிரமணியன், பிரான்மலை. 
நாய்கள் தொல்லை 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவைகள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரத்தில் நாய்கள் குரைத்துக்கொண்டே இருப்பதால் பொதுமக்கள் வீட்டில் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தொல்லை தரும் நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடடிக்கை எடுக்க வேண்டும். 
ராஜேந்திரன், கமுதி. 
போக்குவரத்து நெரிசல் 
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தலாம்மன் பஜார் பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜேஸ்வரி, வத்திராயிருப்பு.

மேலும் செய்திகள்