நாமக்கல்லில் கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி

கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக நாமக்கல்லில் கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.;

Update:2021-10-16 14:17 IST
நாமக்கல், 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோவில்களுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடைவிதித்து இருந்தது.

இதனிடையே நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கோவில்களில் வழிபட அரசு அனுமதி வழங்கியது.


அதைத்தொடர்ந்து நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் முககவசம் அணிந்துக் கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவில், பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள பிற பிரசித்தி பெற்ற கோவில்களில் நடை திறக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்