அதியமான்கோட்டை பகுதியில் ஒரே நாளில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அதியமான்கோட்டை பகுதியில் ஒரே நாளில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2021-10-17 22:27 IST
நல்லம்பள்ளி:
அதியமான்கோட்டை பகுதியில் ஒரே நாளில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4 வீடுகளில் திருட்டு
நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான்கோட்டை, இந்திரா நகர், சிவா சாலை  பகுதிகளில் ஒரே இரவில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள்  பீரோக்களில் வைத்திருந்த தங்க நகைகள், பணம், வெள்ளி பொருட்களை, திருடிச்சென்றனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஒவ்வொரு வீடுகளில் திருட்டு போன நகைகள், பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் எவ்வளவு என  உரிமையாளர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு 4 வீடுகளிலும் பீரோக்களில் பதிவான கைரேகைகளை ஆய்வு செய்தனர். 
வலைவீச்சு
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 4 பேர் முககவசம் அணியாமல் ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த பதிவை வைத்து போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்