பாம்பு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு

படப்பை அருகே பாம்பு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.;

Update:2021-10-18 05:57 IST
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 37). இவருடைய மூத்த மகன் சச்சின் என்ற நித்திஷ் (வயது 6). 2 - ம் வகுப்பு படித்து வந்தான். இளைய மகன் விக்னேஷ் (3). இவர்கள் இருவரும் வீட்டின் பின்புறம் உள்ள வயல் பகுதியில் நேற்று முன்தினம் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வயல்வெளியில் இருந்த 6 அடி நீள விஷ பாம்பு சச்சினை கடித்துவிட்டது. உடனடியாக சச்சினை பொத்தேரி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சச்சின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்