நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசம்
மெலட்டூர் அருகே நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமடைந்தன. இதனால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
மெலட்டூர்;
மெலட்டூர் அருகே நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமடைந்தன. இதனால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைநீரில் மூழ்கிய பயிர்கள்
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே இரும்புதலை வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட தென்னஞ்சோலை கிராமத்தில் குறுவை பருவத்தில் நடவு செய்யப்பட்டு பல ஏக்கர் நெற்பயிர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் நீரில் மூழ்கி உள்ளன. வயல்களில் தேங்கிய மழைநீர் வடியாததால் நெற்பயிர்கள் அழுகி் வீணாகும் நிலையில் உள்ளது.
இழப்பீடு
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வருவாய்த்துறையினர் மூலம் கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.