திருநங்கையை கத்தியால் வெட்டி வழிப்பறி

சென்னை வியாசர்பாடியில் திருநங்கையை கத்தியால் வெட்டி வழிப்பறி செய்த 5 பேர் கொண்ட கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update:2021-10-19 10:41 IST
பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சி.கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 21). திருநங்கையான இவர், அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினர். பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல், கத்தியால் லோகேசின் கால் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு, அவரது கையில் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த லோகேஷ், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்