சரக்கு ரெயிலில் 1327 டன் உரம் வந்தது
சரக்கு ரெயிலில் 1327 டன் உரம் வந்தது;
பொள்ளாச்சி
காரைக்காலில் இருந்து பொள்ளாச்சிக்கு சரக்கு ரெயிலில் 1,327 டன் உரம் கொண்டு வரப்பட்டது.
சரக்கு ரெயிலில் வந்த உரம்
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு மற்றும் போத்தனூர் இடையேயான மீட்டர் கேஜ் ரெயில் பாதை, அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டது. இதையடுத்து தற்போது ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் பீகார், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங் களில் இருந்து கோதுமை, சோயா போன்றவை சரக்கு ரெயிலில் பொள்ளாச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் புதுச் சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து பொள்ளாச்சிக்கு சரக்கு ரெயிலில் யூரியா உரம் கொண்டு வரப்பட்டது. 21 பெட்டிகளில் 1327 டன் உரத்தை கொண்டு வந்தனர்.
இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:-
3 மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு
கோவை மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. சாகுபடிக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளுக்கு கிடைக்க காரைக் காலில் இருந்து ரெயில் மூலம் உரம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த உரங்களை கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு பிரித்து 100 லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.
உரத்தை சரக்கு ரெயிலில் இருந்து இறக்கும் பணியில் 150 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 100 லாரிகளில் மேற் கண்ட 3 மாவட்டங்களுக்கும் உரம் அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.