மதுக்கடை பாரில் தகராறு; 5 பேர் கைது
மதுரையில் மதுக்கடை பாரில் தகராறில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மதுரை,
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 36). இவரும், இவருடைய நண்பர்கள் கார்த்திக், அசாருதீன், விக்னேஷ் சுனில் பிரபாகரன் மற்றும் ஸ்ரீநிவாசன் ஆகியோர் எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள மதுக்கடை பாரில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது பாரில் இருந்த ஊழியர்களுடன் இவர்கள் 5 பேரும் தகராறில் ஈடுபட்டு பீர்பாட்டிலால் ஊழியரை தாக்கியதுடன், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.