வங்கியில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.4¾ லட்சம் மோசடி

மதுரையில் வங்கியில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.4¾ லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.;

Update:2021-10-22 02:15 IST
மதுரை,

மதுரை ஆர்.எம்.எஸ். ரோட்டில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக இருப்பவர் பிரவீன்குமார். இவர் திலகர் திடல் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் மதுரை மகபூப்பாளையம் அன்சாரி நகர் 4-வது தெருவை சேர்ந்த பரசுராமன் என்பவர் நகைகளை அடமானம் வைத்து ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் பெற்றார். இந்தநிலையில், அவர் வைத்த அந்த நகைகளை மதிப்பீடு செய்து பார்த்த போது, அவை அனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. எனவே கவரிங் நகையை பயன்படுத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பரசுராமன் மீது திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்