விற்பனை உரிமம் இல்லாதவர்களிடம் உரம் வாங்க வேண்டாம்

விற்பனை உரிமம் இல்லாதவர்களிடம் உரம் வாங்க வேண்டாம்

Update: 2021-10-22 16:00 GMT
சுல்தான்பேட்டை

பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை, நெகமம், கிணத்துக்கடவு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்து உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை பண்படுத்தி, பயிர் சாகுபடிக்கு தயார் செய்து உள்ளனர். சில விவசாயிகள் பல்வேறு பயிர்களை சாகுபடியும் செய்து உள்ளனர்.

இந்த நிலையில், பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் போலி உரம் நடமாட்டம்  அதிகமாக உள்ளதாக வேளாண் அதிகாரிகளுக்கு புகார் சென்று கொண்டு இருக்கிறது. எனவே அதைத்தடுக்க அதிகாரிகள் அடிக்கடி சோதனையும் மேற்கொண்டு வருகிறார்கள். 

இது குறித்து கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி கூறியதாவது:- 

உரிமம் பெறாத உரங்களை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். தரமற்ற வேளாண் இடுபொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்டம் முழுவதும் வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். எந்த உரங்களை விவசாயிகள் வாங்க வேண்டும்.

 யாரிடம் வாங்க வேண்டும், என விவசாயிகளுக்கு தெரிவிக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. தோட்டங்களுக்கே வந்து வியாபாரிகள் உரம் விற்பனை செய்தாலும், அந்தப்பகுதியை சேர்ந்த வேளாண் அலுவலர் உடன் விவசாயிகள் ஆலோசிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் ஏமாற்றம் அடைவது தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்