அதிக பாரம் ஏற்றிவந்த வாகனத்திற்கு அபராதம்
அதிக பாரம் ஏற்றிவந்த வாகனத்திற்கு அபராதம்;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் ஆனைமலை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது,மீன் ஏற்றிவந்த ஒரு வாகனத்தை தடுத்துநிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், உரிய அனுமதியுடன் கேரளாவில் இருந்து நெல்லை பகுதிக்கு மீன்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட4.9 டன் அதிகமாக பாரம் ஏற்றப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் நவாஸ் (வயது32) என்பவரை, போலீசார் கடுமையாக எச்சரித்தனர்.மேலும், ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்தனர்.