மணிபர்சை திருடிய பெண் சிக்கினார்

மணிபர்சை திருடிய பெண் சிக்கினார்;

Update:2021-10-27 01:56 IST
மதுரை
மதுரை செல்லூர் அகிம்சாபுரத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார், சுமைதூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 29). இவர் தீபாவளி பண்டிகைக்கு துணி வாங்குவதற்காக தெற்குமாசிவீதி நவபாத்கானா தெருவில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு வந்துள்ளார். அவர் துணிகளை எடுத்து கொண்டு கடை முன்பு நிற்கும் போது அவரது மணிபர்சை பெண் ஒருவர் திருடுவதை பார்த்து விட்டார். இதையடுத்து அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் உதவியுடன் பிடித்து தெற்குவாசல் போலீசில் ஒப்படைத்தார். அந்த மணிபர்சில் ஒரு பவுன் தங்க தோடு, 10 ஆயிரம் ரூபாய் இருந்தது. போலீசார் பிடிபட்ட பெண்ணை விசாரித்த போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த யோகினி (35) என்பதும், அவர் மணிபர்சை திருடியதும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும் அவர் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை, பணம் திருடி வந்ததும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்