மேட்டுப்பாளையம் வந்த மலை ரெயில் டீசல் என்ஜின்

மேட்டுப்பாளையம் வந்த மலை ரெயில் டீசல் என்ஜின்;

Update:2021-10-27 22:03 IST
மேட்டுப்பாளையம் வந்த மலை ரெயில் டீசல் என்ஜின்
மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்படுகிறது. நமது நாட்டில் நீலகிரி, டார்ஜிலங், சிம்லா, மகாராஷ்டிரா மாநிலம் மத்தேரன் ஆகிய பகுதிகளிலும், வெளிநாட்டில் சுவிட்சர்லாந்து உட்பட பல்வேறு பகுதிகளில் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்படும் மலை ரெயில் என்ஜின் 4 வருடத்திற்கு ஒரு முறையும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு  டீசல் மூலம் இயக்கப்படும் ரெயில் என்ஜின் 2 வருடத்திற்கு ஒரு முறையும், ரெயில் பெட்டிகள் 30 மாதத்திற்கு ஒரு முறையும் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் பழுது நீக்கும் பணிக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு பழுது நீக்கும் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்ட டீசல் என்ஜின் அங்கு பழுது நீக்கப்பட்டு கடந்த 22-ந் தேதி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு தனி சரக்கு ரெயிலில் கொண்டுவரப்பட்டது. 

சரக்கு ரெயிலில் இருந்த டீசல் என்ஜினை ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள யார்டில் இறக்கி வைப்பதற்காக ஈரோட்டில் இருந்து 140 டன் எடை கொண்ட டீசல் ராஜாளி கிரேன் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை அடைந்தது. 

அதன் பின்னர் பகல் 12 மணிக்கு என்ஜினை இறக்கி வைக்கும் பணி தொடங்கியது. இதில் மலை ரெயில் உதவி இயக்குனர் (பாரம்பரியம்) சதீஷ சரவணன், பிரேக் டவுன் இன்சார்ஜ் சதீஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 30-க்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் ராஜாளி கிரேட் மூலம் சரக்கு ரெயிலில் இருந்த  டீசல் என்ஜினை பத்திரமாக  இறக்கி வைத்தனர். பகல் 12 மணிக்கு தொடங்கிய பணி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

மேலும் செய்திகள்