சாலையை சீரமைக்க வேண்டும்
அந்தியூர் அடுத்த தாமரைக்கரையில் இருந்து தேவர்மலை செல்லும் தார் சாலையில் கற்கள் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து உள்ளது.;
அந்தியூர் அடுத்த தாமரைக்கரையில் இருந்து தேவர்மலை செல்லும் தார் சாலையில் கற்கள் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் பாதசாரிகள் நடந்து செல்ல முடியவில்லை. எனவே மலைவாழ் மக்கள் நலன் கருதி தாமரைக்கரையில் இருந்து தேவர் மலை வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.