பள்ளி கட்டிடத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருமங்கலம் அருகே பள்ளி கட்டிடத்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update:2021-11-01 01:52 IST
திருமங்கலம்,

திருமங்கலம் அருகே கீழஉரப்பனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப ெதாடக்கப்பள்ளி உள்ளது. இங்குள்ள பள்ளி கட்டிடம் பழமை வாய்ந்தது.கான்கிரீட் கூரை சில சமயங்களில் இடிந்து விழுந்து உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் எனக் கூறி மாவட்ட கலெக்டர், கல்வித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உட்பட பலருக்கும் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். 
ஆனால் இதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இன்று(திங்கட்கிழமை) பள்ளி திறக்கப்பட உள்ளது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலை உள்ளது. எனவே பள்ளிக்கட்டிடத்தை சரி செய்ய கோரி திருமங்கலம்-சோழவந்தான் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மாயராஜலட்சுமி உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து மாற்று ஏற்பாடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்