பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகள் காணொலி காட்சி மூலம் ஆஜர்
பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகள் காணொலி காட்சி மூலம் ஆஜர்;
கோவை
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளை ஒரு கும்பல் ஆபாசமாக வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடு மை செய்து பணம் மற்றும் நகை பறிப்பதாக கடந்த 2019-ம் ஆண்டு புகார் எழுந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முதலில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், பாபு, ஹேரேன் பால், அருண்குமார் என இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது 8 பெண்கள் புகார் அளித்தனர். இது குறித்த வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை நேற்று மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. எனவே சேலம் மத்திய சிறை மற்றும் ஈரோடு மாவட்டம்
கோபிசெட்டிபாளையம் கிளைசிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் 9 பேரும் காணொலி காட்சி வழியாக நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, வழக்கு விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.