வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.;

Update:2021-11-02 22:33 IST
மதுரை, 
மதுரை புது விளாங்குடி ராமமூர்த்திநகர், சர்ச் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி உஷா (வயது 35). சம்பவத்தன்று இரவு அவர் வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து உஷா கழுத்தில் இருந்த ஒரு பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அவர் கூடல்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்த போது அவர் வீட்டில் கதவை சரியாக பூட்டாததால், மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

மேலும் செய்திகள்