கத்திக்குத்து சம்பவத்தில் பட்டாக்கத்தியுடன் வாலிபர் கைது
கத்திக்குத்து சம்பவத்தில் பட்டாக்கத்தியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
சோழவந்தான்,
கத்திக்குத்து சம்பவத்தில் பட்டாக்கத்தியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தகராறு
சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த போஸ் மகன் பிரேம்நாத் (வயது34). அதே ஊரைச் சேர்ந்தவர்கள் ஜெயசந்திரன், பாலு (30). இவர்கள் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்து பிரேம்நாத்தை பாலு கத்தியால் குத்தி உள்ளார். இதில் பிரேம்நாத் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் காடுபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.
கைது
தப்பி ஓடிய பாலுவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். குருவித்துறையில் பதுங்கி இருந்த பாலுவை போலீசார் கைது செய்தனர்.பாலுவிடம் இருந்து பட்டா கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.