நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு

நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு;

Update:2021-11-05 19:33 IST
நெகமம்

கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 28), இவரது மனைவி நித்திய ஶ்ரீ (19). இவர்கள் இருவரும் பாலக்காட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். நெகமம் அருகே உள்ள காட்டம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பள்ளிக்கூடம் அருகே சென்றபோது நாய் ஒன்று குறுக்கே வந்தது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்த கணவன்-மனைவி 2 பேரும் கீழே விழுந்தனர். இதனால் அவர்கள் 2 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. 

இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்