குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
மதுரையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
மதுரை,
மதுரை பீ.பி.குளம் மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 29). இவர் மீது நகரின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் நேற்று சரத்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.