கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலியானார்.;

Update:2021-11-08 01:28 IST
திருமங்கலம்,
விருதுநகர் காரியாபட்டி அருகே உள்ள கொடுக்கன் குளத்தைச் சேர்ந்தவர் மணி (வயது 65). இவரது மகன் பிரபு. இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் காரியாபட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்றனர். எலியார்பத்தி சுங்கச் சாவடி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றபோது அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தை, மகன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இவர்கள் 2 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மணி உயிரிழந்தார். பிரபு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்