பெண்ணிடம் செல்போன் திருட்டு

பெண்ணிடம் செல்போன் திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update:2021-11-09 01:56 IST
மதுரை,
மதுரை நியூ குமரன் நகரை சேர்ந்தவர் திவ்யா சகாயமேரி (வயது 26). சம்பவத்தன்று இவர் கீழவெளிவீதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது அவரது மணிபர்சை யாரோ மர்மநபர்கள் திருடிவிட்டனர். அதில் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் பணம் இருந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்