துடியலூர்
கோவையை அடுத்த துடியலூர் அருகே ஜி.என். மில்ஸ், கவுண்டம்பா ளையம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடை பெற்றன. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிய தனிப் படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
துடியலூர் சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்தராஜன், சிறப்பு சப்- இன்ஸ் பெக்டர் லூர்தராஜ் மற்றும் போலீசார் அனந்தீஸ்வரன், ராஜ்குமார், சுந்தர் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை, துடியலூர் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட உதயகுமார் (வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.