வால்பாறை
வால்பாறையில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக வந்த புகார் மனுவின் அடிப்படையில் கோவை டாஸ்மாக் மண்டல மேலாளர் மகாராஜ் தலைமையில் மதுவிலக்கு போலீசார் வால்பாறை நகர், கருமலை, சிறுகுன்றா, குரங்குமுடி, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, இஞ்சிப்பாறை ஆகிய இடங்களில திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் மண்டல மேலாளர் மகாராஜ் தெரிவித்தார்.