வால்பாறையில் பூத்துக்குலுங்கும் பனிமலர்கள்
வால்பாறையில் பூத்துக்குலுங்கும் பனிமலர்கள்;
வால்பாறை
வால்பாறையில் பனிக்காலத்தை வரவேற்கும் பனிமலர்கள் பூத்து குலுங்குவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பூத்துக்குலுங்கும் பனிமலர்கள்
மலைப்பிரதேசமான வால்பாறையில் கோடைக்காலம், தென் மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, பனிக்காலம் என்று 4 பருவகாலம் உள்ளது. இதில் பனிக்காலம் தொடங்கும்போது வால்பாறையில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் பனி மலர்கள் பூத்து குலுங்கும்.
தற்போது இங்கு வடகிழக்கு பருவமழை முடிந்து பனிக்காலம் தொடங்கி உள்ளது. இந்த பனிக்காலத்தை வரவேற்கும் வகையில் தற்போது இங்கு பனிமலர்கள் பூத்து குலுங்குகிறது.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
சாலையோரம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள இந்த செடிகளில் பூத்து உள்ள இந்த மலர்களை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்ததும் அங்கு சென்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, வால்பாறையில் பனிமலர்கள் பூத்து குலுங்குவதால் பனிக்காலம் தொடங்கி உள்ளது. தற்போது லேசான மழை பெய்வதுடன் குளிரும் நிலவுவதால், இந்த காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள் என்றனர்.