கருங்கல்பாளையம் சந்தைக்கு 400 மாடுகள் விற்பனைக்கு வந்தன

கருங்கல்பாளையம் சந்தைக்கு 400 மாடுகள் விற்பனைக்கு வந்தன.;

Update:2021-11-12 03:52 IST
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை நேற்று கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக மாடுகள் கொண்டு வரப்பட்டன. 250 பசு மாடுகள், 150 எருமை மாடுகள் என மொத்தம் 400 மாடுகள் விற்பனைக்கு வந்தது.
இதில் பசு மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரைக்கும், எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரைக்கும் விற்பனையானது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை பிடித்து வேனில் ஏற்றிச் சென்றனர். வழக்கம்போல் இந்த வாரமும் வெளிமாநில வியாபாரிகள் கருங்கல்பாளையம் சந்தைக்கு வரவில்லை.

மேலும் செய்திகள்