திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி சாலையை சீரமைக்கும் பணி

திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

Update: 2021-11-12 16:25 GMT
திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை மிகவும் குறுகலான 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது ஆகும். மேலும் திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை உள்ளது. இதனால் இந்த மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வந்த வண்ணம் இருக்கும். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக திம்பம் மலைப்பாதையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கடந்த வாரம் திம்பம் மலைப்பாதையின் 27-வது கொண்டை ஊசி வளைவு அருகே 2 இடங்களில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதைத்ெதாடர்ந்து 12 சக்கர கனரக வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் பயணிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.  
சீரமைக்கும் பணி
மேலும் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் சாலை வலுவிழந்தது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டு சாலையை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி திம்பம் மலைப்பாதையில் குறைந்த வேகத்தில் வாகனங்கள் செல்ல போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்