இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகுந்த பாம்பு

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பாம்பு புகுந்தது;

Update:2021-11-12 22:01 IST
பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த அலுவலகத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. இதுபற்றி அறிந்ததும் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பழைய பைல்கள் இருந்த இடத்தில் பதுங்கி இருந்த பாம்பை லாவமாக மீட்டனர். மீட்கப்பட்டது 6 அடி சாரை பாம்பு ஆகும். பின்னர் பாம்பை ஒரு சாக்குப்பையில் போட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் கொண்டு சென்று விட்டனர்.

மேலும் செய்திகள்