ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 பேர் கைது

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2021-11-13 01:00 IST
மதுரை, 
மதுரை கூடல்புதூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பொதிகை நகர் பகுதியில் ரோந்து சென்ற போது ஆட்டோவில் சிலர் போலீசாரை பார்த்ததும் பதுங்குவதை கண்டு பிடித்தனர். உடனே போலீசார் அந்த ஆட்டோவை சுற்றி வளைத்து அதில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் செல்லூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ரவி (வயது 25), கொன்னவாயன்சாலை விக்னேஷ் (27), அருள்தாஸ்புரம் மணிவண்ணன் (24) என்பதும், ஆட்டோவில் அவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் 2 அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்