புகாா் பெட்டி

தினத்தந்தி pugar petti

Update: 2021-11-12 20:42 GMT

  ------
  
சாக்கடை கழிவு அள்ளப்படுமா? 

  ஈரோடு மாநகராட்சி 20-வது வார்டுக்கு உள்பட்ட பெரியவலசு திலகர் வீதியில் சாக்கடை கழிவுகள் கடந்த பல மாதங்களாக அள்ளப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசு உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், பெரியவலசு.
  --------
குப்பைத்தொட்டி வைக்கப்படுமா? 

  புஞ்சைபுளியம்பட்டி எஸ்.ஆர்.டி. நகர் பகுதியில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த பகுதி வழியாக பஸ்சில் செல்லும் பயணிகள், பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு வசதியாக ஒரு குப்பை தொட்டியை நகராட்சி நிர்வாகம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், புஞ்சைபுளியம்பட்டி.
  -------
  
குப்பையை அகற்ற வேண்டும்

  பவானி தலைமை தபால் நிலையம் பின்புறம் குப்பைகள் கொட்டப்பட்டு் உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. குப்பைகளில் இருந்து விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் வந்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். உடனே குப்பைகளை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பொதுமக்கள், பவானி
  ------------
  
சாக்கடை வடிகால் வேண்டும் 
  அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் குறிச்சி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாக்கடை வடிகால் அமைக்க குழி தோண்டப்பட்டது. இதற்காக குழியில் இருந்து மண் எடுக்கப்பட்டு ரோட்டில் கொட்டப்பட்டது. இந்த மண் அள்ளப்படவில்லை. இதனால் ரோடு மேடு, பள்ளமாக காணப்படுகிறது. இதன்காரணமாக ரோட்டில் பொதுமக்கள் நடமாட முடியவில்லை. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தட்டுத்தடுமாறி செல்கிறார்கள். எனவே ரோட்டில் கிடக்கும் மண்ணை அள்ளுவதுடன், சாக்கடை வடிகால் பணியையும் விரைந்து முடிக்க வேண்டும்.
  பொதுமக்கள், குறிச்சி.
  ---------------
  

மேலும் செய்திகள்