ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டார்.;
மதுரை,
சிலைமான் போலீஸ் எல்லைக்குட்பட்ட சமத்துவபுரம், சக்கிமங்கலம் ரைஸ்மில் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் மாவட்ட தனிப்பிரிவு போலீசாருடன் தீவிர ரோந்து பணி நடந்தது. அப்போது, சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற அருண்பாண்டி (வயது 31), முத்துப்பாண்டி (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சுமார் 46 டன் ரேஷன் அரிசி மூடைகள் மற்றும் ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி, ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த பொருட்கள் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு குழுவிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது. மேலும் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்து உள்ளார்.