பணம், செல்போன் திருட்டு
பணம், செல்போன் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
மதுரை,
மதுரை அரசரடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் தேனி மெயின் ரோடு விராட்டிபத்து பகுதியில் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு கடையை அடைத்து விட்டு மறுநாள் காலை கடைக்கு சென்றார். அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பெட்டியில் இருந்த ரூ. 48 ஆயிரம் மற்றும் 2 செல்போன்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டார். உடனே இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.