சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது;

Update:2021-11-14 23:27 IST
திருமங்கலம், 
திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மாயமானார். இது தொடர்பாக அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சிறுமியை சிக்கம்பட்டியை சேர்ந்த சூர்யா (வயது 22) திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்