தொடர் மழையால் நிரம்பிய சாத்தியார் அணை

தொடர் மழையால் சாத்தியார் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-11-15 21:03 GMT
அலங்காநல்லூர்
தொடர் மழையால் சாத்தியார் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாத்தியார் அணை
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி நீர் மட்டம் கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணை கடந்த சில வருடங்களாக சரி வர பருவமழை பெய்யாத காரணத்தால் அணை வறண்டு காணப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு டிசம்பர் மாத கடைசியில் பெய்த கனமழை காரணமாக இந்த ஆண்டின் ஜனவரி மாத தொடக்கத்தில் அணை முழு கொள்ளளவை அடைந்து மறுகால் சென்றது. 
இதனால் இந்த அணை மூலம் பாசன வசதி பெறும் 11 கிராம பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
நிரம்பியது
இந்தநிலையில் தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையினால் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது இந்த நவம்பர் மாதம் அணை 29 அடி  முழு கொள்ளளவை எட்டி மீண்டும் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதன் மூலம் ஒரே ஆண்டில் சாத்தியார் அணை இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை அடைந்து நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதியில் மானாவாரி பயிர் செய்ய தேவையான ஈரப்பதம் இருக்கும் என்பதாலும், விவசாயம் செய்ய தேவையான நீர்பிடிப்பு கிடைக்கும் என்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
இன்னும் சில நாட்களில் 11 கிராம கண்மாய் பாசன வசதிக்காக அரசு உத்தரவு வந்ததும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.

மேலும் செய்திகள்