வாகனம் மோதி 2 பெண்கள் பலி; வாலிபர் படுகாயம்

வேலை முடிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, வாகனம் மோதியதில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். ேமாட்டார் சைக்கிளை ஓட்டிச் ெசன்ற வாலிபர் படுகாயம் அடைந்தார்.;

Update:2021-11-16 02:34 IST
மதுரை
வேலை முடிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, வாகனம் மோதியதில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். ேமாட்டார் சைக்கிளை ஓட்டிச் ெசன்ற வாலிபர் படுகாயம் அடைந்தார்.
2 பெண்கள்
மதுரை மாவட்டம் வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் வள்ளியப்பன் என்பவருடைய மனைவி பஞ்சு(வயது 45), முருகேசன் மனைவி லட்சுமி (வயது 34). இவர்கள் இருவரும் சோளங்குருணி பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தனர். 
நேற்று இரவு வேலை முடிந்து அவர்கள் அந்த கடையில் வேலை பார்க்கும் அப்துல்ரபீக்(30) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர்.  அப்போது அந்த வழியாக எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பஞ்சு, லட்சுமி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
விசாரணை
மோட்டார் சைக்கிளை ஓட்டிய அப்துல்ரபீக், பலத்த காயத்துடன் உயிருக்கு பேராடிக் கொண்டிருந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ரெஜினா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
மேலும் சம்பவம் குறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனத்தையும், அதன் டிரைவரையும் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்