ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கத்திக்குத்து

ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கத்திக்குத்து;

Update:2021-11-16 20:55 IST
ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கத்திக்குத்து
கோவை

கோவை சொக்கம்புதூர் அருகே உள்ள ஜீவா வீதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 23). ஆம்புலன்ஸ் டிரைவர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் அந்த பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் கிஷோரிடம் தகராறு செய்தனர். 

இதனை தொடர்ந்து அவர்கள், தாங்கள் மறைத்து வைத்த கத்தியை எடுத்து கிஷோரை குத்திவிட்டு,  அங்கிருந்து தப்பி சென்றனர். கழுத்தில் கத்தி குத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கிஷோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் ஆம்புலன்ஸ் டிரைவரை கத்தியால் குத்தியது அந்த பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) மற்றும் ஆர். எஸ். புரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. 

அவர்கள் இருவரையும் நேற்று காலை செல்வபுரம் போலீசார் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன் விரோதம் காரணமாக கிஷோரை கத்தியால் குத்தியது தெரியவந்தது.

மேலும் செய்திகள்