பெண்ணின் ஆபாச வீடியோவை கணவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய முன்னாள் காதலன் கைது
பெண்ணின் ஆபாச வீடியோவை அவரது கணவருக்கு அனுப்பிய முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.;
கோவை
பெண்ணின் ஆபாச வீடியோவை அவரது கணவருக்கு அனுப்பிய முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.
ரெயில் பயணத்தில் காதல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பெஞ்சமின் பால் (வயது 26). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது கோவை-மேட்டுப்பாளையம் ரெயிலில் பயணித்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
அப்போது அவருக்கு, கோவையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 28 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
அது நாளடைவில் காதலாக மாறியது. படிப்பு முடிந்ததும் பெஞ்சமின் பால் துடியலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதன்பிறகு காதலர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
ஆபாச வீடியோ
இதற்கிடையே அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் வேறு ஒரு நபருடன் திருமணம் ஆனது. இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு வீடியோ லிங்க் வந்தது. அதை அவர் திறந்து பார்த்து உள்ளார். அதில் தனது மனைவியின் ஆபாச வீடியோ இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி அவர் கேட்ட போது தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். இது குறித்து அந்த பெண் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
முன்னாள் காதலன் கைது
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் அந்த பெண் ணின் புகைப்படத்தை மார்பிங் மூலம் ஆபாச வீடியோ தயாரித்து அனுப்பியது அவருடைய முன்னாள் காதலன் பெஞ்சமின் பால் என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.