மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

கோவை மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2021-11-17 21:48 IST
மன்னார்குடி:
கோவை மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம் 
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார். மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரியில் மாணவர்கள், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட துணைத்தலைவர் பாரதிசெல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வகுப்புகளை புறக்கணித்தனர்
முன்னதாக 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி வாயிலில் திரண்ட மாணவர்கள், மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்