நடிகர் விஜய்சேதுபதிக்கு மிரட்டல்
சமூகவலைத்தளத்தில் நடிகர் விஜய்சேதுபதிக்கு மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
கோவை
சமூகவலைத்தளத்தில் நடிகர் விஜய்சேதுபதிக்கு மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விஜய்சேதுபதிக்கு மிரட்டல்
கோவை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்துமக்கள் கட்சி தமிழக தலைவர் அர்ஜுன் சம்பத், கடந்த 7-ந் தேதி நடிகர் விஜய்சேதுபதி தொடர்பாக டுவிட்டர் என்ற சமூகவலைத்தளத்தில் ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார். அதில், நடிகர் விஜய்சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001 வழங்கப்படும் என்று அதில் பதிவிட்டு இருந்தார்.
அர்ஜுன்சம்பத் மீது வழக்குப்பதிவு
அந்த பதிவு, அமைதி மீறுதலை தூண்டும் உட்கருத்துடனும், குற்றச்செயலுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் உள்ளது. எனவே பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் அர்ஜுன்சம்பத் மீது சட்டப்பிரிவுகள் (504) பொது அமைதியை குலைக்க நேரிடும் என்று தெரிந்தும் குற்றம்புரிதல், 506 (கொலை மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.