வேன்-கார் மோதல்: 20 பேர் காயம்
வேன்-கார் மோதிக்கொண்டதில் 20 பேர் காயம் அடைந்தார்கள்.;
விஜயமங்கலம் அருகே உள்ள வாய்ப்பாடியில் இருந்து 16 பேர் கொண்ட திருமண கோஷ்டியினர் ஈரோடு வில்லரசம்பட்டிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை பெத்தாம்பாளையம் பிரிவு அருகே நேற்று மதியம் 2 மணி அளவில் சென்றபோது வேனும், கேரளாவில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார், வேனின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. இதில் வேனில் இருந்த 16 பேர் மற்றும் கார் டிரைவர், கணவன், மனைவி, குழந்தை ஆகிய 4 பேர் என மொத்தம் 20 பேர் லேசான காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்த தகவலறிந்த பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ., அரசு மருத்துவமனைக்குச் சென்று, அங்கு சிகிச்சையில் இருந்தவர்களை பார்த்து உடல் நலம் விசாரித்தார். இந்த விபத்து குறித்து, பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.