மண்ணிவாக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மண்ணிவாக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ராமகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் கீர்த்திகா (வயது 16). இவர் ஒட்டேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவி கீர்த்திகா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த ஒட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், கீர்த்திகா வேறு ஒரு வாலிபருடன் காதல்வயப்பட்டதாகவும், இதனை அவரது பெற்றோர் எதிர்த்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.