செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை; பாலாற்றில் வெள்ளப்பெருக்கு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-11-19 13:09 GMT
பலத்த மழை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளான ஆப்பூர், சிங்கபெருமாள்கோவில், வீராபுரம், செட்டிப்புண்டியம், திம்மாவரம், புலிப்பாக்கம், ஆத்தூர், அஞ்சூர், பாலூர், வில்லியம்பாக்கம், தென்மேல்பாக்கம், வல்லம், பொன்விளைந்தகளத்தூர், மனப்பாக்கம், வடகால், கொண்ட மங்களம், ஆலப்பாக்கம், மேலமையூர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.

ஏரிகள் நிரம்பின

செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளம், குட்டைகளில் இளைஞர்கள் தூண்டில் போட்டும், வலைவீசியும் மீன்கள் பிடித்து வருகின்றனர்.

இந்த மழையால் ஏராளமான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மேலும் செய்திகள்